லைஃப்ஸ்டைல்

கலர்ஃபுல் குடைமிளகாய் சாலட் செய்வது எப்படி

Published On 2018-02-17 04:21 GMT   |   Update On 2018-02-17 04:21 GMT
தினமும் உணவில் சாலட்டை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குடைமிளகாயில் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிவப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய் - தலா பாதி அளவு,
தக்காளி - 1,
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
புதினா - ஒரு டேபிள்ஸ்பூன்,
ஓரிகானா - அரை டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மிளகு தூள் - அரை டீஸ்பூன்,
தேன் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

மூன்று நிற குடைமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும்.

புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, தேன், எலுமிச்சைச் சாறு, ஓரிகானா, புதினா, [பாட்டி மசாலா] மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News