லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு சத்தான வெஜிடபிள் புட்டு

Published On 2018-01-22 06:03 GMT   |   Update On 2018-01-22 06:03 GMT
காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு காய்கறியை சேர்த்து புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த வெஜிடபிள் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
தேங்காய் துருவல் - அரை கப்
கேரட் - 2
பீன்ஸ் - 15
பட்டாணி - சிறிதளவு



செய்முறை : 

கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, அதனுடம் பொடியாக நறுக்கிய காய்கறிகள், தேங்காய் துருவல் சேர்த்து அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். பின்னர் புட்டு குழாயில், இந்த மாவை நிரப்பி புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சத்தான வெஜிடபிள் புட்டு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News