லைஃப்ஸ்டைல்

கொழுப்பை குறைக்கும் கொள்ளு - வெங்காய அடை

Published On 2018-01-15 05:28 GMT   |   Update On 2018-01-15 05:28 GMT
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கொள்ளு - 2 கப்
அரிசி - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 5
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - பாதி
இஞ்சி - சிறிய துண்டு
பெருங்காயம் - சிறிதளவு



செய்முறை : 

வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.

கொள்ளு, அரிசியினை சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, வெங்காயம், தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், சோம்பு, உளுந்தம் பருப்பு, இஞ்சி, பெருங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சத்தான கொள்ளு - வெங்காய அடை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News