லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த ப்ரோக்கோலி சாலட்

Published On 2017-10-26 05:25 GMT   |   Update On 2017-10-26 05:25 GMT
காலையில் சத்தான சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்று ப்ரோக்கோலியை வைத்து சாலட் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ப்ரோக்கோலி - 1
வெங்காயம் - 1
புதினா - 1 சிறிய கப்
எழுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - சிறிது
தேங்காய் - எண்ணெய்.



செய்முறை :

ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து பூக்களாக உதிர்த்து வைக்கவும்.

வெங்காயம், புதினாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வத்தவும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பின் ப்ரோக்கோலி சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கவும். தேவை என்றால் தண்ணீர் தெளிக்கலாம். ப்ரோக்கோலி அதிகம் வேகவேண்டியதில்லை. கடிப்பதற்கு நறுக்கென்று இருக்க வேண்டும்.

இப்போது புதினா சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.

உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.

கடைசியாக எழுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான சத்தான ப்ரோக்கோலி சாலட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News