லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான பார்லி - ஓட்ஸ் கட்லெட்

Published On 2017-10-05 05:04 GMT   |   Update On 2017-10-05 05:04 GMT
பார்லி, ஓட்ஸ் என்றாலே கஞ்சி தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல்..இப்படி கட்லெட் செய்து பாருங்கள். இன்று இந்த கட்லெட்டை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பார்லி - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - தாளிக்க
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
கரம்மசாலா தூள் - 1/2 தே.கரண்டி.



செய்முறை :

வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லியினை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பார்லியை வேக வைத்து ஆறியதும் வேகவைத்து அரைத்து கொள்ளவும். (தண்ணீர் ஊற்ற வேண்டாம்.)

ஒட்ஸினை கடாயில் போட்டு வெறுமனே 1 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்து பின், வெங்காயம், பச்சை மிளகாய், கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் கொத்தமல்லி, புதினா தூவி, சிறிது நேரம் வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிடவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த பார்லி, வறுத்த ஒட்ஸ், வதக்கிய பொருட்கள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ( தண்ணீர் ஊற்றி பிசைய கூடாது.) இதனை அப்படியே 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

பிசைத்த மாவை கட்லெட்டுகளாக பிடித்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடங்கள் வேகவிடவும். ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு, கட்லெட்டுகளை திருப்பி போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

சுவையான சத்தான பார்லி - ஒட்ஸ் கட்லெட் ரெடி.

கவனிக்க : இதில் வெஜிடேபுள்ஸ் சேர்த்து கட்லெட் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். அவரவர் விருப்பதற்கு ஏற்றாற் போல மசாலாவினை சேர்த்து கொள்ளலாம். ஒட்ஸுனை விரும்பினால் ஒன்றும் பாதியுமாக பொடித்தும் சேர்த்து கொள்ளலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News