லைஃப்ஸ்டைல்

குதிரை வாலி தேங்காய் சாதம்

Published On 2017-09-28 05:24 GMT   |   Update On 2017-09-28 05:24 GMT
சிறுதானிய உணவை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரை வாலி சாதம் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - முக்கால் கப்,
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
கடுகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் - சிட்டிகை,
காய்ந்த மிளகாய் 3.



செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வறுத்த வேர்க்கடலை, பெருங்காயம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும்.

பிறகு வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News