லைஃப்ஸ்டைல்

சத்தான மதிய உணவு வரகு புளியோதரை

Published On 2017-08-01 03:30 GMT   |   Update On 2017-08-01 03:30 GMT
உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இன்று வரகு அரிசியை வைத்து புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வரகு - ஒரு கப்,
புளி - எலுமிச்சை அளவு,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
வேர்க்கடலை - தேவையான அளவு,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 6,
பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

வரகை அரை மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து ஆற விடவும்.

தனியா, காய்ந்த மிளகாயை மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

வேர்க்கடலையை தனியாக வறுத்து வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை விடவும்.

புளிக்கரைசல் நன்றாக கொதித்து பக்குவம் வந்தவுடன் அதில் உப்பு, தனியா - மிளகாய் பொடி, வறுத்த வேர்க்கடலை, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

புளிக்கரைசலின் எண்ணெய் பிரிந்து வரும் போது வேக வைத்த வரகு அரிசியை சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News