லைஃப்ஸ்டைல்

சத்தான கோதுமை வாழைப்பழ இனிப்பு அடை

Published On 2017-07-29 05:06 GMT   |   Update On 2017-07-29 05:06 GMT
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் உகந்தது இந்த கோதுமை வாழைப்பழ அடை. இன்று இந்த அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 350 கிராம்,
வாழைப்பழம் - 2,
கருப்பட்டி - 200 கிராம்,
ஏலக்காய் - 5 கிராம் (பொடிக்கவும்),
முந்திரிப்பருப்பு - 100 கிராம் (நறுக்கவும்),
நெய் - 20 மி.லி.,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 100 கிராம்,
தண்ணீர் - 1/2 லிட்டர்.

செய்முறை :

கருப்பட்டியை சிறிது தண்ணீரில் கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.

வாழைப்பழத்தை நன்கு மசித்து, இத்துடன் கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், கரைத்த கருப்பட்டியை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

தோசைக்கல்லை காயவைத்து சிறிது நெய் விட்டு அடையாக ஊற்றி மேலே முந்திரிப்பருப்பு, தேங்காயை தூவி மிதமான சூட்டில் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சூப்பரான கோதுமை வாழைப்பழ அடை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News