லைஃப்ஸ்டைல்

சத்தான உளுந்தம் பருப்பு கருப்பட்டி கஞ்சி

Published On 2017-07-17 05:27 GMT   |   Update On 2017-07-17 05:27 GMT
எலும்புகளுக்கு பலன் தரக்கூடியது இந்த உளுந்தம் பருப்பு கருப்பட்டி கஞ்சி. இந்த கஞ்சி குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உளுந்தம் பருப்பு - ஒரு கப்
கருப்பட்டி / வெல்லம் துருவியது - 1/2 கப்
தண்ணீர் - 3-4 கப்
பூண்டு - 2
தேங்காய் துருவியது - 1/4 கப்
சுக்கு - சிறிய துண்ட
பால்- ஒரு கப் (தேவையென்றால்)



செய்முறை :

* குக்கரில் உளுந்தம் பருப்பு, உரிச்ச பூண்டு, சுக்கு எல்லாம் போட்டு 15 நிமிஷம் வேக வைங்க.

* கருப்பட்டி / வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ளவும்.

* உளுந்தம் பருப்பு நன்றாக வெந்தவுடன் அதில் காய்ச்சியி கருப்பட்டி / வெல்லம் பாகு, துருவின தேங்காயும் போட்டு 5 நிமிஷம் மறுபடியும் வேக விடுங்க.

* தேவைபட்டால் காச்சின பாலையும் சேர்த்து 5 நிமிஷம் மறுபடியும் வேக விட்டு இறக்கி பரிமாறவும்.

* சத்தான உளுந்தம் பருப்பு இனிப்பு கஞ்சி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News