லைஃப்ஸ்டைல்

சத்தான சூப்பரான காய்கறி ஸ்டஃப்டு சப்பாத்தி

Published On 2017-06-07 05:24 GMT   |   Update On 2017-06-07 05:24 GMT
சப்பாத்தி என்றால் அனைவருக்கும் போரடிக்கும். அதே மாவில் கொஞ்சம் காய்கறிகளை ஸ்டஃப்பிங் வைத்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 2 கப்
முள்ளங்கி - 1
கேரட் - 1
கீரை - கைப்பிடி அளவு
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* கோதுமை மாவை சிறிது உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

* முள்ளங்கி, கேரட்டை தனித்தனியே துருவி வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கீரை, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், கீரை, முள்ளங்கி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.



* சப்பாத்தி மாவினை வட்டமாக உருட்டி சிறிதாகத் தேய்த்து வைக்கவும். ஒரே அளவில் இரு சப்பாத்தி தேய்த்த பின், ஒன்றின் மேல் இந்த முள்ளங்கிக் கலவையை சிறிது எடுத்துவைத்து இன்னொரு தேய்த்து வைத்த சப்பாத்தியை அதன் மேல் வைக்கவும். இரு சப்பாத்தியின் ஓரங்களை உள்ளே முள்ளங்கிக் கலவை இருக்குமாறு வைத்து வட்டமாக இணைத்துக்கொண்டே வரவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* சூப்பரான காய்கறி காய்கறி ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.

* முள்ளங்கி கொஞ்சம் நீர் விடும். அதனால் கொஞ்சம் கவனமாகச் செய்தால் ஸ்டஃப்டு காய்கறி சப்பாத்தி ரெடி!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News