லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த குதிரைவாலி வெங்காய அடை

Published On 2017-06-03 05:24 GMT   |   Update On 2017-06-03 05:24 GMT
தினமும் உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று குதிரைவாலி அரிசி, வெங்காயம் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - 1 கப்,
துவரம்பருப்பு - 1/2 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
காய்ந்த மிளகாய் - 5,
இஞ்சி - சிறிய துண்டு,
கடலைப்பருப்பு - 1/2 கப்,
பூண்டு - 5 பல்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகம் - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1.



செய்முறை :

* பெரிய வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* குதிரைவாலி அரிசி, பருப்பு வகைகளை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

* மிக்சியில் முதலில் குதிரைவாலி அரிசி, தேவையான தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பாதி அரைந்ததும் பருப்பு வகைகள், இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக வதக்கி, அடை மாவில் கொட்டி கலக்கவும். மாவை புளிக்க விட வேண்டாம்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெயை விட்டு இருபுறமும் வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

* குதிரைவாலி வெங்காய அடை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News