லைஃப்ஸ்டைல்

சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்

Published On 2017-05-02 03:42 GMT   |   Update On 2017-05-02 03:42 GMT
சிறுதானியங்களில் குதிரைவாலி மிகவும் சத்து நிறைந்தது. இன்று குதிரைவாலி அரிசியை வைத்து சத்துநிறைந்த தேங்காய் சாதம் செய்து எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - ஒரு கப்,
கெட்டியான தேங்காய்ப்பால் - ஒரு கப்,
தண்ணீர்  - ஒரு கப்,
நெய் - 3 டீஸ்பூன்,
ஏலக்காய், பட்டை, லவங்கம், கறிவேப்பிலை - தேவையான அளவு,
சர்க்கரை - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* குதிரைவாலியை அரிசியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

* அடிகனமான பாத்திரத்தில், தண்ணீரில் நன்கு களைந்த குதிரைவாலி அரிசியுடன் தேவையான நீர் சேர்த்து வேகவிடவும்.

* முக்கால் பதம் வெந்ததும்... உப்பு, தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்க்கவும்.

* சாதம் வெந்தவுடன்... நெய்யில் தாளித்த ஏலக்காய், பட்டை, லவங்கத்தை தேங்காய் சாதத்தில் சேர்த்துக் கிளறி இறக்கவும்...

* சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News