லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான கேழ்வரகு ரவா தோசை

Published On 2017-04-25 03:34 GMT   |   Update On 2017-04-25 03:34 GMT
கேழ்வரகு, கோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று கேழ்வரகு, கோதுமை ரவை வைத்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - அரை கப்,
முந்திரிப்பருப்பு - 20
கோதுமை ரவை - ஒரு கப்,
அரிசி மாவு - கால் கப்,
கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - அரை கப்,
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முந்திரியை துண்டுகளாக உடைத்து கொள்ளவும்.

* மிளகை கொரகொரப்பாக உடைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு, ரவை ஆகியவற்றை போட்டு ஒன்றாக கலக்கவும்.

* இதனுடன் உப்பு, சீரகம், மிளகு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லித்தழை, முந்திரி சேர்த்து, நீர் விட்டுக் கரைக்கவும். (ஒரு பங்கு மாவுக்கு 2 பங்கு நீர் விட்டுக் கரைக்கலாம்). 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி, சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு முறுகலாக எடுக்கவும்.

* சத்தான சுவையான கேழ்வரகு - ரவை தோசை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News