லைஃப்ஸ்டைல்

தர்பூசணி - திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்

Published On 2017-04-07 05:47 GMT   |   Update On 2017-04-07 05:47 GMT
தேன், தர்பூசணி, திராட்சை மூன்றுமே தோலுக்கு பளபளப்பை தரும். இன்று இந்த இரண்டு பழங்களை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

தர்பூசணி - 300 கிராம்,
பன்னீர் திராட்சை - 50 கிராம்,
தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.



செய்முறை:

* தர்பூசணியைத் தோல் நீக்கி, கொட்டையை எடுத்து விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

* பன்னீர் திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும்.

* பின்னர், தர்பூசணித் துண்டுகள் மற்றும் பன்னீர் திராட்சையை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும்.

* வடிகட்டிய ஜூஸில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தேன் கலந்து குடிக்கலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News