லைஃப்ஸ்டைல்

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சுரைக்காய் ஜூஸ்

Published On 2017-03-24 03:26 GMT   |   Update On 2017-03-24 03:26 GMT
வெயில் காலத்திற்கு உடல் சூடு அடிக்கடி பிடித்துக் கொள்ளும், அப்போது சுரைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் சூட்டை உடனடியாக தணிக்கும்.
தேவையான பொருட்கள் :

சுரைக்காய் - 1
மோர் - 1 கப்
எலுமிச்சை பழம் - 1
மிளகுத்தூள்  - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப



செய்முறை :

* சுரைக்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவிக் கொள்ளவும்.

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு கடாயை வைத்து சுரைக்காயைப் போட்டு லேசாக வதக்கி ஆற வைத்து கொள்ளவும். ( எண்ணெய் ஊற்றக் கூடாது)

* வதக்கிய சுரைக்காயை மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

* வடிகட்டிய ஜூஸில் மோர், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, ஐஸ்கட்டி சேர்த்து நன்றாக கலந்து பருகலாம்.

* சுரைக்காய் ஜூஸ் ரெடி!

* உடலில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைக்கும் சக்தி கொண்டது சுரைக்காய் ஜூஸ்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News