லைஃப்ஸ்டைல்

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படி

Published On 2017-03-23 03:40 GMT   |   Update On 2017-03-23 03:40 GMT
குழந்தைகளுக்கு ஸ்வீன் கார்ன் மிகவும் பிடிக்கும். இன்று வித்தியாசமாக ஸ்வீட் கார்ன் வைத்து சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது செய்வது மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள் :

ஸ்வீட் கார்ன் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 2,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
சோம்பு - கால் டீஸ்பூன்,
உப்பு - சுவைக்கு
தேங்காய் துருவல் - 3  டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.



செய்முறை :

* ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஸ்வீட் கார்னை சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின் வெந்த கார்ன் சேர்த்துக் கிளறவும்.

* பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, புதினா, தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும்...

* டேஸ்டி கார்ன் சுண்டல் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News