லைஃப்ஸ்டைல்

முட்டைகோஸ் - பட்டாணி சாதம்

Published On 2017-03-14 04:53 GMT   |   Update On 2017-03-14 04:53 GMT
குழந்தைகள் மதியம் பள்ளியில் சாப்பிட மிகவும் சத்தானது முட்டைகோஸ் - பட்டாணி சாதம். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி சாதம் - 4 கப்
முட்டை கோஸ் - 400 கிராம்
வெங்காயம் - 1
பச்சை பட்டாணி - 50 கிராம்
குடமிளகாய் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
புதினா - சிறிது
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
சிகப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி



செய்முறை :

* முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், குடமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர், பச்சைப்பட்டாணி, குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்னர், மெல்லியதாக துருவிய முட்டை கோஸை சேர்த்து நன்கு மொற மொறவென வரும்வரை வதக்கவும் ( குழைய கூடாது).

* பின்னர் அதில் உப்பு, சிகப்பு மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.

* பின்னர், வடித்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அத்துடன் மிளகுத்தூள், நெய், புதினா இலைகளைத் தூவி சாதம் உடையாதவாறு பக்குவமாக கிளறி இறக்கவும்.

* முட்டை கோஸ் - பட்டாணி சாதம் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News