லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான கவுனி அரிசி லட்டு

Published On 2017-03-10 06:35 GMT   |   Update On 2017-03-10 06:35 GMT
கவுனி அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று குழந்தைகளுக்கு சத்தான கவுனி அரிசி லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கவுனி அரிசி - ஒரு கப்
முந்திரி, பாதாம், வேர்க்கடலை - 1/4 கப்
பசு நெய், நாட்டு சர்க்கரை - தலா 3/4 கப்



செய்முறை :

* முந்திரி, பாதாம், வேர்க்கடலையை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* கவுனி அரிசியை நன்கு சுத்தம் செய்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து அதில் அரைத்த கவுனி மாவை போட்டு சிறு தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும்.

* அதன் பின் பொடித்த முந்திரி, பாதாம், வேர்க்கடலைக் கலவையை லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

*  அடுத்து அதில் பொடித்த நாட்டு சர்க்கரை, நெய், வறுத்த மாவு சேர்த்து நன்றாக கிளறவும்.

* இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே சிறு உருண்டைகளாகப் பிடித்து எடுக்க வேண்டும்.

* கருப்பு நிற அரிசியான கவுனி அரிசியில் சத்தான சுவையான லட்டு தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News