லைஃப்ஸ்டைல்

புத்துணர்ச்சி தரும் மேங்கோ - ஆனியன் சாலட்

Published On 2017-03-06 05:29 GMT   |   Update On 2017-03-06 05:29 GMT
தினமும் ஏதாவது ஒரு சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று மாம்பழம், வெங்காயம் சேர்த்த ஒரு சத்து நிறைந்த சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மாம்பழத் துண்டுகள் - 1
வெங்காயம் - ஒன்று
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
மிளகு தூள் - தேவைக்கு
சாட்மசாலா - தேவைக்கு
உப்பு - தேவைக்கேற்ப.



செய்முறை :

* மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.

* கடைசியாக மிளகு தூள், சாட் மசாலா தூள் தூவி பரிமாறவும்.

* சத்து நிறைந்த மேங்கோ - ஆனியன் சாலட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News