லைஃப்ஸ்டைல்

கோதுமை - கேழ்வரகு உருண்டை

Published On 2017-02-23 03:50 GMT   |   Update On 2017-02-23 03:50 GMT
குழந்தைகளுக்கு சத்து நிறைந்த இந்த உருண்டையை செய்து கொடுக்கலாம். இந்த கோதுமை - கேழ்வரகு உருண்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - ஒரு கப்,
கேழ்வரகு மாவு -  அரை கப்,
பாதாம் - 4,
முந்திரி - 10,
பொட்டுக்கடலை - அரை கப்,
நெய், நாட்டு சர்க்கரை - தேவையான அளவு.



செய்முறை :

* கோதுமை மாவு, கேழ்வரகு மாவை தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

* பொட்டுக் கடலையை கடாயில் சிறிது சூடாகும் வரை வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து சலித்து கொள்ளவும்.

* பாதாம், முந்திரியை உடைத்து நெய்யில் வறுத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு அதனுடன் பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

* நெய்யை சூடாக்கி இதில் நன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டவும்.

* பயணத்தின்போது களைப்பை நீக்கி, சக்தி கொடுக்கும் சத்தான ரெசிப்பி இது.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News