லைஃப்ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் இஞ்சி - கற்றாழை ஜூஸ்

Published On 2017-02-17 03:34 GMT   |   Update On 2017-02-17 03:35 GMT
வயிற்று கோளாறு, சரும பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது கற்றாழை ஜூஸ். இன்று உடலுக்கு குளிர்ச்சி தரும் இஞ்சி - கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கற்றாழை ஜெல் - 100 கிராம்,
எலுமிச்சம் பழம் - 1,
தேன் - தேவையான அளவு,
இஞ்சி, உப்பு - சிறிதளவு.

செய்முறை :

* இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

* எலுமிச்சை சாறு, தேன், உப்பு, இஞ்சி இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும்.

* அடுத்து மிக்சியில் கற்றாழை ஜெல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.

* அரைத்த கற்றாழை ஜூஸ், இஞ்சி சாறு இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.

* சூப்பரான இஞ்சி - கற்றாழை ஜூஸ் ரெடி.

* தண்ணீருக்கு பதிலாக மோரையும் பயன்படுத்தலாம்.

பலன்கள்: கற்றாழை, சரும நோயை சரிப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சியைத்தரும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News