லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கான கருப்பட்டி காபி

Published On 2017-02-16 03:36 GMT   |   Update On 2017-02-16 03:36 GMT
சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்க ஆசைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தலாம். இன்று கருப்பட்டி காபி போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கருப்பட்டி - 1/4 கப்,
காபித்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை :

* முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் 2 கப் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, டிகாக்‌ஷன் இறக்கவும்.

* டிகாக்‌ஷன் இறங்கியதும் அதை வடிகட்டி, கரைத்த கருப்பட்டியைச் சேர்த்து அருந்தவும்.

* விருப்பப்பட்டால் பால் சேர்த்தும் அருந்தலாம்.

பலன்கள்: சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News