லைஃப்ஸ்டைல்

சத்தான திணை கார பொங்கல்

Published On 2017-01-22 05:14 GMT   |   Update On 2017-01-22 05:14 GMT
திணையில் மற்ற தானியங்களை விட அதிக அளசில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இன்று சத்தான திணை கார பொங்கல் செய்து எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

திணை - 100 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
நெய் - தேவைக்கு
மிளகு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
முந்திரி - 25 கிராம்
ப.மிளகாய் - 2

செய்முறை:

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* திணையையும், பாசிப்பருப்பையும் 3 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

* ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், மிளகு, சீரகம், முந்திரி, ப.மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்த பின் வேக வைத்த திணையுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி இறக்கவும்.

* சூப்பரான திணை கார பொங்கல் ரெடி!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News