லைஃப்ஸ்டைல்
சுவையான ஓட்ஸ் - கோதுமை மாவு ஊத்தப்பம்
வயதானவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ், கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், கோதுமை சேர்த்து ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
அரிசி மாவு - ஒரு ஸ்பூன்
ரவை - ஒரு ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
வதக்கி சேர்க்க :
வெங்காயம் - ஒன்று
ப.மிளகாய் - ஒன்று
மிளகு - ஐந்து
சீரகம் - கால் தேக்கரண்டி
நட்ஸ் (முந்திரி (அ) பாதம் (அ) வால்நட் - பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
கேரட் துருவல் - தேவையான அளவு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, ரவை உப்பு சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளித்த பின் நட்ஸை போட்டு வறுக்கவும் அடுத்து வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவலை போட்டு 5 நிமிடம் வதக்கிய பின் தோசை மாவில் சேர்த்து நன்றாக கலந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
* நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சுவையான சுவையான ஓட்ஸ் கோதுமை மாவு ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.