லைஃப்ஸ்டைல்

சத்தான கார்ன் ரவை கிச்சடி

Published On 2017-01-10 07:55 GMT   |   Update On 2017-01-10 07:55 GMT
கோதுமை ரவையை போல் கார்ன் ரவையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று சத்தான கார்ன் ரவை கிச்சடியை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சோள ரவை - 1 கப்
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
பட்டாணி - 1/2 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - 1
உப்பு, எண்ணெய் - தேவையானது

தாளிக்க :

கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை :

* சோள ரவையை எண்ணெய் விடாமல் வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* எலுமிச்சை பழத்தை சாறு பிழந்து தனியாக வைத்து கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி, பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

* அனைத்து நன்றாக வதங்கியதும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

* தண்ணீர் கொதித்தவுடன் அதில் மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து.வறுத்து வைத்துள்ள சோள ரவையை பரவலாக தூவி கைவிடாமல் நன்கு கிளறவும். தீயை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்..

* வெந்ததும் கடைசியில் நெய் ஊற்றி இறக்கவும்.( விருப்பப்பட்டால் நெய் சேர்க்கலாம்)

* கொஞ்சம் ஆறின பிறகு எலுமிச்சம்பழத்தை பிழிந்து கொத்தமல்லித்தழையை நன்றாக கிளறி பரிமாறவும்.

* சத்தான கார்ன் ரவை கிச்சடி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News