லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல்

Published On 2016-11-25 02:17 GMT   |   Update On 2016-11-25 02:17 GMT
குழந்தைகளுக்கு காலையில் கொடுக்க சத்தான பிரெட் ஃப்ரூட் ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் - 5 ஸ்லைஸ்,
பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 2 டீஸ்பூன்,
நறுக்கிய ஆரஞ்சு, கிவி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் திராட்சைப்பழம் தலா - 2 டீஸ்பூன்,
முந்திரி, உலர் திராட்சை (சேர்த்து) - 4 டீஸ்பூன்,
மில்க்மெய்ட் - 5 டீஸ்பூன்,
தேன் - சிறிதளவு,
சில்வர் பேப்பர் (ஃபாயில் பேப்பர்) தேவைக்கேற்ப.

செய்முறை:

* முந்திரி, உலர் திராட்சை மற்றும் எல்லா பழங்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

* பிரெட் துண்டுகளை ஓரம் வெட்டிக்கொள்ளவும்.

* பிரெட் மீது மில்க்மெய்ட் ஒரு டீஸ்பூன் தடவி நடுவில் கொஞ்சம் பழக்கலவை, சிறிது தேன் சேர்த்து பரப்பவும்.

* பிரெட்டை சில்வர் பேப்பர் மீது வைத்து இறுக்கமாக ரோல் செய்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்துப் பரிமாறவும்.

* பிரெட் ஃப்ரூட் ரோல் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News