லைஃப்ஸ்டைல்

சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்

Published On 2016-10-20 04:18 GMT   |   Update On 2016-10-20 04:19 GMT
நெல்லிக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஏதாவது ஒருவகையில் தினமும் நெல்லிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :

பெரிய நெல்லிக்காய் - 10,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிதளவு.  

செய்முறை:

* பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

* மிக்சியில் நறுக்கிய நெல்லிக்காய், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் போட்டு தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும்.

* சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News