லைஃப்ஸ்டைல்

பைனாப்பிள் ரசம் செய்வது எப்படி

Published On 2016-09-26 02:44 GMT   |   Update On 2016-09-26 02:44 GMT
பலவகைகளில் ரசம் செய்யலாம். இப்போது பைனாப்பிள் வைத்து ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பைனாப்பிள் - 4 துண்டுகள்
புளி - ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு
தண்ணீர் - 250 மில்லி
சாம்பார் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகு, சீரக தூள் - கால் டீஸ்பூன்
வேக வைத்த பருப்பு - ஒரு கப்
கடுகு - கால் டீஸ்பூன் 
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

* பைனாப்பிளை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

* வேக வைத்த பருப்பை நன்றாக மசித்து கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கரைத்த புளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, நறுக்கிய பைனாப்பிளை போட்டு, நன்றாக கொதிக்க விடவும். 

* அடுத்து அதனுடன் மசித்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். 

* மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, மிளகு - சீரகத்தூள் தாளித்து சேர்த்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சுவையான சத்தான பைனாப்பிள் ரசம் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News