லைஃப்ஸ்டைல்

உடல் உறுப்பு தானத்தின் நோக்கம்

Published On 2017-04-03 05:35 GMT   |   Update On 2017-04-03 05:35 GMT
தானத்தில் சிறந்தது அன்ன தானம், இரத்த தானம் என்ற நிலை மாறி இன்று உடல் உறுப்பு தானம் தான் மிகவும் உயரிய தானமாக கருதப்படுகிறது.
தானத்தில் சிறந்தது அன்ன தானம், இரத்த தானம் என்ற நிலை மாறி இன்று உடல் உறுப்பு தானம் தான் மிகவும் உயரிய தானமாக கருதப்படுகிறது. இந்த உடல் உறுப்பு தானத்தில் நம் தமிழ்நாடு நமது நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் ஒர் முன்மாதிரியாக திகழ்கிறது என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

உடல் உறுப்பு தானத்தின் நோக்கம்:

நாம் மறைந்த பிறகும் தானம் செய்யும் உடல் உறுப்புகள் செயல் இழந்தவர்களுக்கு பொருத்துவதினால் சுமார் 10-க்கு மேற்பட்ட நபர்கள் பயன்பெறுகிறார்கள். மேலும் உடல் உறுப்பு தானத்தை நம் உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஆதரிக்கவே செய்கிறது.

உறுப்புகள் தானம் செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விருப்பப்பட்டால் அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் விண்ணப்பத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம். அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.விருப்பமாக உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து உள்ளவர்கள் கண்டிப்பாக தனது பெற்றோர், மனைவி மக்கள் மற்றும் நண்பர்களிடம் அவரது விருப்பத்தை தெரிவித்து இருக்க வேண்டும்.



அப்படி செய்து இருந்தால் மட்டுமே அவரது விருப்பம் நிறைவேற்றப்படுவதற்கு எளிதாக இருக்கும். மேலும் உறுப்புகள் தானம் தொடர்பாக தேவைப்படும் ஆலோசனைகள் மற்றும் உதவிகளுக்கு Rtn. P.K. சரவணன் அவர்களை 94437 96262 என்ற எண்ணில் எப் பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

மூளைச்சாவு அடைந்தவர்கள் மூலம் உடல் உறுப்பு தானம்:

“விபத்துக்கள் இல்லாத உலகை உருவாக்குவோம்” ஆனால் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முழு முயற்சி எடுக்கிறார்கள். இருப்பினும், மூளைச்சாவு என்ற நிலையை அடைந்தால் அவர்களின் உடல் உறுப்புகளை நோயாளியின் பெற்றோர், கணவர் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளின் முழு சம்மதத்தோடு உடல் உறுப்பு தானம் செய்யலாம் என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.

அவ்வாறு தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளாகிய கருவிழி, இருதயம், இதய வால்வுகள், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், இரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது. இவ்வாறு தானமாக பெறும் உடல் உறுப்புகள், உடல் உறுப்பு செயலிழந்தோருக்கு பொருத்தப்பட்டு அவர்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றப்படுகிறது.

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடியாக இருந்தாலும் தென் மாவட்டங்களின் நிலையை பார்க்கும் பொழுது, உடல் உறுப்பு தானத்தை பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைந்த நிலையிலேயே உள்ளது.

Similar News