லைஃப்ஸ்டைல்

காய்ச்சல் உள்ளவர்கள் சேர்க்க - தவிர்க்க வேண்டியவை

Published On 2017-03-20 04:41 GMT   |   Update On 2017-03-20 04:41 GMT
காய்ச்சல் வந்தவர்கள் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், எந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
காய்ச்சல் - எந்த ஒர் இரும்பு மனிதரையும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் பதம் பார்க்கும். எனக்குக் காய்ச்சலே வந்ததில்லை என எவரும் சொல்ல முடியாது. ஆனால், இந்தக் காய்ச்சல் ஒரு தனிநோய் இல்லை. வேறு ஏதேனும் நோய்க்கான ஒரு வெளிப்பாடு அல்லது அறிகுறிதான். 'லங்கணம் பரம ஒவுஷதம்’ என்று ஒரு மருத்துவ மொழி உண்டு. அதன் பொருள், 'காய்ச்சலுக்கு மருந்து பட்டினி’ என்பதுதான்.

சேர்க்கவேண்டியவை: எளிய உணவுகளான இட்லி, இடியாப்பம், புழுங்கல் அரிசி கஞ்சி மட்டும் குறைவாக எடுப்பது நல்லது. வெதுவெதுப்பான நீர் அருந்துவதும், புளிப்பில்லாத பழச்சாறு குடிப்பதும் மிக அவசியம்.

நிலவேம்புக் கஷாயம் மட்டும் மூன்று நாட்கள் தவறாமல் எடுத்துக்கொண்டாலே போதும்.



குழந்தைகளுக்கு துளசி, மிளகு, கற்பூரவல்லி, வெற்றிலை, மாசிக்காய்த்தூள் இவற்றை கஷாயமாக்கி 30 - 60 மில்லி இரண்டு வேளை நான்கு நாட்கள் கொடுக்கலாம். அஜீரணத்தைத் தொடர்ந்து வரும் காய்ச்சல் எனில், சீரகக் கஷாயம் இரு வேளை கொடுங்கள்.

வீட்டில் வாரம் மூன்று நாள் நெல்லிக்காய்ப் பச்சடி, மிளகு ரசம் கண்டிப்பாக இருக்கவேண்டும். வேப்பம்பூ ரசம் நல்ல பலன் தரும். நிலவேம்புக் குடிநீரை வாங்கி வீட்டில் அனைவரும் தினசரி காலை, மாலை வெறும் வயிற்றில் 60- 90 மிலி கஷாயம் வைத்து ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிடலாம்.

தவிர்க்கவேண்டியவை:  உணவில் கூடியவரை இனிப்பைத் தவிர்த்துவிடுங்கள்.

Similar News