லைஃப்ஸ்டைல்

இதயத்தைக் பாதுகாக்க அற்புதமான வழிமுறைகள்...

Published On 2017-02-11 04:03 GMT   |   Update On 2017-02-11 04:03 GMT
நமக்குள் ஓயாது துடித்துக்கொண்டிருக்கும் முக்கியமான உறுப்பு, இதயம். சரி, இதயத்தைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நான் தயார். அதற்கான வழிகளைக் கூறுங்கள் என்கிறீர்களா? இதோ...
நமக்குள் ஓயாது துடித்துக்கொண்டிருக்கும் முக்கியமான உறுப்பு, இதயம். அது பழுதுபட்டுவிடாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

தற்போது குறைந்த வயதினர்கூட இதயநோய்களால் பாதிக்கப்படும் பரிதாபம் நேர்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம்தான் இதற்குக் காரணம்.

சரி, இதயத்தைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நான் தயார். அதற்கான வழிகளைக் கூறுங்கள் என்கிறீர்களா? இதோ...

இதயக் கோளாறுகள் ஏற்பட்டு மாரடைப்பு வருவதற்கு புகை பிடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணம் என்று இதய மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இப்பழக்கத்தைத் தவிர்ப்பது இதயத்துக்கு மிகவும் நல்லது.

தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதிலும் 40 வயதை தொட்டவர்கள், தினமும் குறைந்தது 2 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் செய்தால் மாரடைப்பு வருவதை 60 சதவீதம் அளவு தடுக்கலாம் என்பது மருத்துவர்கள் கருத்து.

காபியை விட டீ, இதயத்துக்கு நன்மை செய்கிறது. ஒரு நாளைக்கு 3 கப் டீ அருந்தினால் மாரடைப்பு அபாயத்தை கணிசமாகக் குறைக்கும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்.

இன்றைய எந்திரத்தனமான வாழ்க்கை முறையில் பலரும் எப்போதும் மன அழுத்தம், நெருக்கடியுடனே நேரத்தைக் கடத்து கிறார்கள். அதைத் தவிர்க்கும் வகையில், மனதை நெகிழ்வாக வைத்துக்கொள்ளும் வழிகளைத் தேடலாம். எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவர்கள், பணியுடன், இனிமையான பொழுதுபோக்கும் அவசியம் என்பதை உணர வேண்டும்.

தர்பூசணி பழத்தில், ‘லைக்கோபீன்’ என்னும் இதயத்தை காக்கும் பொருள் உள்ளது. எனவே தர்பூசணியை தாராளமாகச் சாப்பிடலாம்.

கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்ற வற்றை உட்கொள்வதன் மூலம் மாரடைப்பில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

கடைகளில் கிடைக்கும் ‘ரெடிமேடு’ நொறுக்குத் தீனிகள், எண்ணெய் வளம் மிக்க உணவுப்பொருட்கள் போன்றவற்றை ஒதுக்கிவைப்பது நல்லது.

Similar News