லைஃப்ஸ்டைல்

வேர்க்கடலையில் நிறைந்துள்ள அதிகளவு புரதம்

Published On 2016-10-25 08:12 GMT   |   Update On 2016-10-25 08:13 GMT
வேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் (நிலக்கடலை) தான் இருக்கிறது.

முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் வேர்க்கடலையில் இருக்கிறது. இந்த வேர்க்கடலை நமது உடலுக்கு தேவையான அதிகமான சத்துக்களை வழங்குகின்றது.

மூளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு, பற்கள் மற்றும் எலும்புகளின் பலத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.

கர்ப்பிணிகள் வேர்க்கடலையை சாப்பிடுவதால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்புக் கோளாறுகள் ஏற்படாது.

வேர்க்கடலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் ஏ மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன.

ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியம் வேர்க்கடலையில் குறைவு. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

Similar News