லைஃப்ஸ்டைல்
தடாசனம்

மாணவர்களின் முதுகு, கழுத்து வலியை குணமாக்கும் ஆசனம்

Published On 2020-01-27 03:45 GMT   |   Update On 2020-01-27 03:45 GMT
மாணவர்கள் அதிகமான எடையுள்ள புத்தகங்களை சுமப்பதால் வரும் முதுகுவலி, கழுத்துவலி இந்த ஆசனம் செய்வதால் நீங்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை

விரிப்பில் இரு கால்களையும் சேர்த்து நேராக நிற்கவும். இரு கைளையும் தலைக்கு மேல் உயர்த்தி இரு கைகளையும் சேர்த்து கும்பிட்ட நிலையில் நிற்கவும்.

இப்பொழுது மெதுவாக மூச்சை உள் இழுத்து இரு குதிகாலை உயர்த்தவும். கால் விரல்களில் நிற்கவும். மூச்சை அடக்கி பத்து விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் மூன்று முறைகள் செய்யவும்.

மேற்குறிப்பிட்ட தடாசனத்தை கை விரல்கள் ஒன்றை பின்னி விரல்கள் வானத்தைப் பார்த்தவாறு வைத்து கால்களை உயர்த்தி பண்ணவும். மூன்று முறைகள் செய்யவும்.

பலன்கள்

மாணவர்கள் அதிகமான எடையுள்ள புத்தகங்களை சுமப்பதால் கழுத்துவலி, முதுகு வலி வரும். அதிக பாடங்கள் படிப்பதால் டென்ஷனாலும் கழுத்துவலி, முதுகு வலி வரும். மன சோர்வு ஏற்படும். இந்த ஆசனம் செய்வதால் முதுகுவலி, கழுத்துவலி நீங்கும். குட்டையான மாணவர்கள் உடல் உயரம் வளர்வதற்கு துணை புரியும்.
Tags:    

Similar News