லைஃப்ஸ்டைல்

மசாலா வஞ்சிரம் மீன் வறுவல்

Published On 2016-07-05 02:00 GMT   |   Update On 2016-07-05 02:00 GMT
மீன் வறுவல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்யும் இந்த வஞ்சிரம் மீன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன் - அரை கிலோ
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 7 பல்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
புளி - சிறிதளவு
வரமிளகாய் - 8
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை :

* மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

* புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

* மிக்சியில் சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், கரைத்த புளியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.



* ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதனுடன் அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி மீனை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

* இப்போது சுவையான மசாலா வஞ்சிரம் மீன் வறுவல் ரெடி.

குறிப்பு: தோசைக் கல்லில் வறுத்தால் தான் மசாலா மீனுடன் சேர்ந்து இருக்கும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News