ஆன்மிகம்
திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவில் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெற்றபோது எடுத்தபடம்.

கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதி கோவில்களில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி

Published On 2021-11-17 04:59 GMT   |   Update On 2021-11-17 04:59 GMT
கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதி கோவில்களில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசாமி கோவிலில் நேற்று ஐப்பசி கடைமுழுக்கு தீர்த்தவாரியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து காவிரி பூச படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றில் புனித நீராடினர். விழா ஏற்பாடுகளை கட்டளை ஸ்தானிகம் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

திருவிசநல்லூர் கிராமத்தில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐப்பசிமாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் கோவில் அர்ச்சகர் கணேஷ்குமார் குருக்கள் சிறப்பு பூஜைகளை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் செய்து இருந்தார்.

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத கடைமுழுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி நாகேஸ்வரர், பெரியநாயகி அம்பாள், விநாயகர், முருகர் வள்ளி தெய்வயானை, அஸ்திரதேவர் தனித்தனி வாகனங்களில் கோவில் பிரகாரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அஸ்திர தேவருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News