ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-09-14 06:07 GMT   |   Update On 2021-09-14 06:07 GMT
தேவநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரம் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு சித்திரை மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதன் காரணமாக கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இதற்கிடையே தற்போது அரசின் விதிமுறைகளை பின்பற்றி கோவில்களில் வழிபாடு நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் சித்திரை மாதம் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம் நேற்று கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தேவநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

இதையடுத்து மங்கள வாத்தியத்துடன் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கோவில் உட்புறத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து தினசரி காலை மற்றும் மாலை நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாத சுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆகிய உற்சவர் கோவில் உட்புறத்தில் உலா வர உள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News