ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

பக்தர்கள் அர்ச்சனைக்கு தடை நீடிப்பு: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வருவாய் இழப்பு

Published On 2021-07-09 08:36 GMT   |   Update On 2021-07-09 08:36 GMT
தற்போது வைரஸ் தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் வேகம் அதிகரித் ததைத் தொடர்ந்து கடந்த 45 நாட்களாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

தற்போது வைரஸ் தொற்று குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பக்தர்கள் அர்ச் சனை மற்றும் வழிபாடு கள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறை வேறுவதற்காக அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்கக் கிரீடம், தங்க ஆபரணங்கள், நகை அலங்காரம், சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்துவார்கள்.

இந்த வழிபாடு நடத்தும் பக்தர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கட்டணமாக பெறப்படுகிறது. இதுதவிர அன்னதானம் நடத்தும் பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை நன் கொடையாகவும் கொடுப்பார்கள் அதுமட்டுமின்றி இந்த கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நூற்றுக்கணக்கான கடைகள், ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் பல்வேறு கட்டிடங்களில் இருந்து மாதம் தோறும் பெறப்படும் வாடகை வருமானமும் உள்ளது.

இதற்கெல்லாம் மேலாக கோவில் வளாகத்தில் பிரசாத ஸ்டால் ஆன்மீக புத்தகம் தேங்காய் பழம் அர்ச்சனை தட்டு பன்னீர் மற்றும் பூ விற்பனை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது உள்ளிட்டவை மூலமும் கோவிலுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

இவையெல்லாம் தற்போது நடைபெறாததால் இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கோவில் வளாகத்துக்குள் வைக்கப்பட்டுள்ள 17நிரந்தர உண்டியலில் மாதந்தோறும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

ஊரடங்கினால் கடந்த 2 மாதங்களாக கோவிலுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News