ஆன்மிகம்
பிச்சாண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

வைகாசி விசாக நிறைவு விழாவை முன்னிட்டு பிச்சாண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-05-27 08:10 GMT   |   Update On 2021-05-27 08:10 GMT
இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் இருப்பதால் கடந்த 16-ந்தேதி வைகாசி விசாக விழா தொடங்கி மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு கடந்த 10 நாட்களாக சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக விழாவானது 11 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் இருப்பதால் கடந்த 16-ந்தேதி வைகாசி விசாக விழா தொடங்கி மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு கடந்த 10 நாட்களாக சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து விழாவின் நிறைவு நாளான நேற்று கோவிலில் உள்ள பெருமாள் மண்டபத்தில் உற்சவர் பிச்சாண்டேஸ்வரருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் விழாவில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News