ஆன்மிகம்
லால்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் அமுது படையல் விழா

லால்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் அமுது படையல் விழா

Published On 2021-05-12 05:03 GMT   |   Update On 2021-05-12 05:03 GMT
லால்பேட்டையில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான அமுது படையல் விழா கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக எளிமையாக நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் அமுது படையல் விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் எளிமையாக நடந்தது.

விழாவையொட்டி காலையில் சித்தி விநாயகருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட உற்சவரான சித்தி விநாயகர் கோவில் வளாகத்திலேயே வீதி உலா சென்றார்.

 விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளுவர் குல சங்கத் தலைவர் எல்.ஏ.கருணாகரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News