ஆன்மிகம்
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் சுவாமி- அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற போது எடுத்த படம்.

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் உருத்திரபாத திருநாள் திருக்கல்யாணம்

Published On 2021-03-27 05:55 GMT   |   Update On 2021-03-27 05:55 GMT
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் உருத்திரபாத திருநாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல்வேறு இன்னல்களை போக்க கூடிய சரபேஸ்வரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் உருத்திரபாத திருநாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. 7-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை மாற்றுதல், சீர்வரிசை எடுத்து வருதல், ஊஞ்சல் உற்சவம், மாங்கல்ய தாரணம் என அறம் வளர்த்தநாயகி கம்பகரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவில் தருமபுர ஆதீனம் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(சனிக்கிழமை) திருத்தேர் வடம் பிடித்தலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காவிரியில் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் ஆலோசனை பேரில் காசாளர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News