ஆன்மிகம்
திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு மகாசண்டி யாகம்

திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு மகாசண்டி யாகம்

Published On 2021-02-12 05:55 GMT   |   Update On 2021-02-12 05:55 GMT
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு தை மாதம் சதுர்த்தி தினத்தில் மகா சண்டி யாகம் நடைபெற்றது.
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் கங்கவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அமைந்துள்ள வராகி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி தை மாதம் சதுர்த்தி தினத்தில் மகா சண்டி யாகம் நடைபெற்றது.

இதையொட்டி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை முதல்கால யாக பூஜையை தொடர்ந்து சண்டி யாகம் நடைபெற்றது.

இதில் அம்மனுக்கு உகந்த பட்டுப்புடவை, வஸ்திரங்கள், வாசனை திரவியம், வெள்ளி கொலுசு, மெட்டி ஆகியவை யாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. யாக கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த யாகத்தில் புதுவை, தமிழக பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீதாராமன் தலைமையில் கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News