ஆன்மிகம்
தேவிகாபுரத்தில் குன்றின் மீது உள்ள பாலமுருகன் கோவிலில் தெப்ப திருவிழா

தேவிகாபுரத்தில் குன்றின் மீது உள்ள பாலமுருகன் கோவிலில் தெப்ப திருவிழா

Published On 2021-01-25 07:32 GMT   |   Update On 2021-01-25 07:32 GMT
சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் கிராமத்தில் மலை மீது உள்ள பாலமுருகன் கோவிலில் தைக் கிருத்திகையையொட்டி 6-ம் ஆண்டாக தெப்ப திருவிழா நடந்தது.
சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் கிராமத்தில் மலை மீது உள்ள பாலமுருகன் கோவிலில் தைக் கிருத்திகையையொட்டி 6-ம் ஆண்டாக தெப்ப திருவிழா நடந்தது. இதனையொட்டி காலையில் பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மாலை 4 மணி அளவில் உற்சவர் பாலமுருகனுக்கு அலங்காரம் செய்து புஷ்ப பல்லக்கில் வைத்து தேவிகாபுரம் முக்கிய வீதி வழியாக எடுத்து வந்தனர். அப்போது பக்தர்கள் முருகா முருகா முருகா என்று பக்தி கோஷத்துடன் தேங்காய் உடைத்து கற்பூர ஆராதனை செய்தனர்.

பின்னர் பாலமுருகனை தெப்பத்தில் எழுந்தருள வைத்து 3 முறை வலம் வர செய்யப்பட்டது. அப்பொழுது ஆண்களும் பெண்களும் கற்பூரத்தை ஏற்றி நேர்த்திக் கடனாக தெப்பத்தில் விட்டனர். இதனையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மலையாம்புற வடை தச்சாம்பாடி, இந்திரவனம், நம்பேடு, மெடையூர், நரசிங்கபுரம், குப்பம், பெரிய ஆத்திரை, சித்தாத்தூர், கரிக்காத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பாலமுருகன் மீண்டும் கோவிைல சென்றடைந்தார்.
Tags:    

Similar News