ஆன்மிகம்
வரதராஜ பெருமாள்

ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை நடக்கிறது

Published On 2020-12-24 08:38 GMT   |   Update On 2020-12-24 08:38 GMT
ராசிபுரம் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு நடக்கிறது.
ராசிபுரம் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற பொன்வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுவது வழக்கம். விழாவில் ராசிபுரம் மட்டுமின்றி தாலுகா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர்.

இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு நடக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளின்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் தேய்காய், பூ பழம் மற்றும் இதர பூஜை பொருட்கள் ஆகியவற்றை கொண்டு வர அனுமதி இல்லை. கோவில் வளாகத்தில் பக்தர்கள் அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள். நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News