பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் வருகிற 15-ந்தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
அதேவேளையில் கோவிலில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆகமவிதிப்படி மட்டும் நடைபெற்று வருகிறது. அப்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருஆவினன்குடி கோவிலில் நடைபெறும் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.