ஆன்மிகம்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் வழிபாடு செய்த பக்தர்கள்

இன்று, புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2020-09-19 05:04 GMT   |   Update On 2020-09-19 05:04 GMT
புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி பக்தர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
புரட்டாசி மாதம் பெருமாளின் அனுகிரகம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் சிறப்பான வரங்களை தந்து வருடம் முழுவதும் துன்பங்களை நீக்கி மகிழ்ச்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புதுவையில் உள்ள பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் புரட்டாசி மாத பிறப்பையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், விசேஷ திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் புதுவை காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாசப் பெருமாள் கோவில், ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவில், எம்.எஸ்.அக்ரகாரம் வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில், மிஷன் வீதி செட்டி கோவில், சாரம் கிருஷ்ணன் கோவில், மகாவீர் நகரில் உள்ள பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில், வில்லியனூர் பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி பக்தர்கள் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News