ஆன்மிகம்
முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2020-08-13 05:01 GMT   |   Update On 2020-08-13 05:01 GMT
தா.பேட்டையில் காசிவிசுவநாதர் உடனுறை காசிவிசாலாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆறுமுகபெருமானுக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பால்அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தா.பேட்டையில் காசிவிசுவநாதர் உடனுறை காசிவிசாலாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆறுமுகபெருமானுக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பால்அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது காசிவிசுவநாதர், காசிவிசாலாட்சி, ராஜகணபதி, சரஸ்வதி, துர்க்கை, நடராஜர், பஞ்சமுகபைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பூஜைகள் நடந்தது.

அதனைதொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகபெருமான் வெள்ளி கவசத்தில் விபூதிகாப்பு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் கோவிலில் வழிபட அனுமதிக்க படவில்லை. இதேபோன்று தா.பேட்டை அடுத்த தேவானூர் சண்முககிரிமலையில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.

அதனைதொடர்ந்து ராஜஅலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் உற்சவமூர்த்தி சுவாமி சிறப்பு மலர்அலங்காரத்தில் மேல்மலையை சுற்றி வலம்வந்தது.
Tags:    

Similar News