ஆன்மிகம்
அவ்வையார் அம்மன் கோவில் வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.

பக்தர்கள் வராததால் அவ்வையார் அம்மன் கோவில் வெறிச்சோடியது

Published On 2020-07-22 07:03 GMT   |   Update On 2020-07-22 07:03 GMT
அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள், பக்தர்கள் வராததால் கோவில்வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் காலையில் அவ்வையார் அம்மனுக்கு பூஜை நடந்தது.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் ஆடி மாதம் அனைத்து செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கும்.

இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை படையல் வைப்பார்கள். இந்த நாட்களில் கோவில் வளாகம் திருவிழா கோலம்பூண்டு காணப்படும்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று தொடங்கிய ஆடி முதல் செவ்வாய்க்கிழமையில் அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள், பக்தர்கள் வராததால் கோவில்வளாகம் வெறிச்சோடியது.

ஆண்டுதோறும் பெண்கள், அம்மனுக்கு படைக்க கூழ், கொழுக்கட்டை தயாரிக்கும் இடம் களை இழந்து காணப்பட்டது. இருப்பினும் காலையில் அவ்வையார் அம்மனுக்கு பூஜை நடந்தது. 
Tags:    

Similar News