ஆன்மிகம்
மீனாட்சி அம்மன்

மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2020-07-20 09:52 GMT   |   Update On 2020-07-20 09:52 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு உற்சவ விழா இன்று (திங்கட்கிழமை) இரவு வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு உற்சவ விழா இன்று (திங்கட்கிழமை) இரவு வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து நாளை  (செவ்வாய்க்கிழமை) மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

விழாவில் 24-ந்தேதி ஆடிப்பூரம் தினத்தன்று காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதி மகா மண்டபம் பள்ளியறை முன்பு அம்மனுக்கு ஏற்றி இறங்குதல் வைபவம் நடக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. தினமும் ஆடி வீதியில் காலை, மாலை அம்மன் உலா வருவதற்கு பதில், மீனாட்சி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் சுவாமி வலம் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News