ஆன்மிகம்
கருடன்

கருடனை எந்த கிழமையில் வழிபாட்டால் என்ன பலன்

Published On 2020-03-23 09:25 GMT   |   Update On 2020-03-23 09:25 GMT
கருடனை வணங்கினால் விஷ்ணு பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனை எந்தெந்த கிழமைகளில் வழிபட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாம் பார்ப்போம்.
கருடனை வணங்கினால் விஷ்ணு பகவானை வணங்கிய பலன் கிடைக்கும். கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கருடனை ஞாயிற்றுக் கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.

திங்கட்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.

செவ்வாய் கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.

புதன் கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.

வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
Tags:    

Similar News