ஆன்மிகம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் மூடப்பட்டது

Published On 2020-03-21 03:57 GMT   |   Update On 2020-03-21 03:57 GMT
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. வருகிற 31-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோவில் வாசலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களை மூடவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.

அதன்படி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ராஜகோபுர வாசல் நேற்று காலை 8 மணிக்கு மூடப்பட்டது. வருகிற 31-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோவில் வாசலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.
Tags:    

Similar News